திமுகவிலும் சாதி பாகுபாடு.. மாமன்னன் படத்தை பார்த்து விட்டு போட்டு உடைத்த இயக்குநர் பா.ரஞ்சித்..!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 3:59 pm
Quick Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். உதயநிதியின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சாதி அரசியலை மையப்படுத்தி உருவாகியிரும் படம் மாமன்னன். அப்பா கைகட்டி நின்றால் மகன் அப்படி நிற்கமாட்டான் என்பதை மிகவும் அழுத்தமான, பவர் ஃபுல் அரசியல் பேசும் எமோஷனல் படமாக மாரி செல்வராஜ் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையானது சாதி மோதலை உருவாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தென்மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல இடங்களில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. அதேவேளையில், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்தை பாராட்டியுள்ள பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், திமுகவிலும் சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ்,வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 323

0

0