தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை உரை!!

13 November 2020, 12:17 pm
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்தார்.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கு தனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக மக்களின் வாழ்வில் துன்பம் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

Views: - 22

0

0