தீபாவளியையொட்டி ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு..? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை..!!!

Author: Babu Lakshmanan
23 October 2021, 8:33 am
CM Stalin -Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தில் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்க போடப்பட்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகளில் மெல்ல மெல்ல தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வந்தது. இந்த நிலையில் இன்று ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 11.30க்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. அதேபோல, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றாலும் கூட, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 466

0

0