தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் : உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!

24 September 2020, 11:33 am
CM Wish Vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சில மாவட்டங்களில் மட்டும் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து தே.மு.தி.க. தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழக தலைவர்‌ கேப்டன்‌ அவர்கள்‌ வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல்‌ பரிசோதனைக்காக கேப்டன்‌ விஜயகாந்த்‌ சென்னை மியாட்‌ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்‌.

அந்த வகையில்‌ சென்னை மியாட்‌ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன்‌ விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும்‌, உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல்‌ நலத்துடன்‌ கேப்டன்‌ விஜயகாந்த்‌ உள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், விஜயகாநத் உடல்நைல சீரக உள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக ஒரு அறிக்கையும், மியாட் ஒரு அறிக்கையும் முரண்பட்டு வெளியிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டறிந்தார். இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Views: - 5

0

0