மார்ச் 10ம் தேதி வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்… சீனியர்களுக்கு இடம் கிடைக்குமா..?

5 March 2021, 11:24 am
dmk_ stalin - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் திமுக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் உள்பட 3 கட்சிகளுடன் மட்டும் இதுவரையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலே தான் இருந்து வருகிறது.

இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொளி காட்சியின் மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கடந்து கொண்டுள்ளனர். அப்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Views: - 16

0

0