‘இந்தி-ய எதிர்க்கரதிருக்கட்டும்.. முதல்ல தமிழ கத்துக்கொடுங்க’..! தொண்டர்கள் ஒட்டும் போஸ்டரால் தி.மு.க டேமேஜ்..!
15 September 2020, 7:43 pmதமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு, ஆளும் அதிமுகவுடன் இணைந்து திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டெக்கையும் சமூக வலைதளங்களில் தேசிய அளவில் டிரெண்டாக்கினர். மேலும், இந்திக்கு எதிராக பல்வேறு வழிகளிலும் தி.மு.க. தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
ஆனால், இந்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தி.மு.க.வினருக்கு தமிழாவது சரியாக தெரியுமா..? என்ற கேள்வி எழும்பாமலே, விடை கிடைத்துள்ளது.
அதாவது, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலையுடன் சமூக வலைதளத்தில் விவாதம் நடத்த தயார் என்று
தருமபுரி மக்களவை தொகுதி எம்பியான செந்தில்குமார் அறிவித்திருந்தார். இந்த விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, புது விதமான விவாதம் எழுந்துள்ளது.
அதாவது, ‘விவாதத்திற்கு நான் தயார், ஆனால் பிழையின்றி தமிழை எழுத தெரியாது’ என்று தி.மு.க. எம்.பி. முன்பே சரணடைந்து விட்டார். இது பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது.
இந்த நிலையில், தி.மு.க. தொண்டர்கள், தமிழில் வசனங்களை எழுதி ஒட்டும் போஸ்டர்களில் ஏராளமான தவறுகளுடன் தென்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியை எதிர்த்து நில்லுங்கள்… அதற்கு முன்னதாக, தொண்டர்களுக்கு தமிழை தெளிவாக நன்கு கற்றுக் கொடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.