சமூக நீதிக்காக வெளி வேஷம் போடும் திமுக : பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா குற்றச்சாட்டு!!

Author: Udayachandran
1 August 2021, 8:13 pm
H raja Criticize - Updatenews360
Quick Share

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என கூறினார்.

மேலும் மேகதாது விவகாரம் குறித்து பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரதம் நடத்துவோம் என தெரிவித்தார்.

சமூக நீதிக்காக திமுக வெளி வேஷம் போடுவதாகவும், உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாஜக தான் என்றும் கூறினார்.

Views: - 247

0

0