நாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தேர்தல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை

4 March 2021, 5:57 pm
duraimurugan - stalin1 - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக தலைமை மிகவும் பிஸியாக இருந்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஒருவழியாக முடித்து விட்ட திமுக, எஞ்சிய கூட்டணி கட்சிகளுக்கும் ஓரிரு தினங்களில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்த பிறகு, அடுத்ததாக தீவிர பிரச்சாரத்தில் திமுக கவனம் செலுத்தும். இதற்காக, திமுக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சார வியூகம் மற்றும் வேட்பாளர்கள் பற்றி இறுதி செய்வதற்காக, திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் மார்ச் 7ம் தேதி திருச்சியில் நடக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Views: - 7

0

0