திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 25ம் தேதி நடக்கும் : தேதியை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
24 June 2021, 2:13 pm
Durai Murugan - Updatenews360
Quick Share

திமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் 25ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதோடு, நகராட்சிக்கான தேர்தலையும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவில் தொடங்க இருக்கிறது.

முன்னோட்டமாக, உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். முதலில் 26ம் தேதி நடைபெறும் என அறிவித்த அவர், பிறகு 25ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அவர் ஆணை பிறப்பிக்க உள்ளார்.

Views: - 265

0

0