‘ஃபீஸ் கட்ட முடியலனா எதுக்கு டாக்டருக்கு படிக்கறீங்க’ : மாணவர்களின் கல்வி கட்டண விவகாரத்தில் இரட்டைவேடம் போடும் திமுக..!! (வீடியோ)

23 November 2020, 7:42 pm
stalin upset - updatenews360
Quick Share

சென்னை : தனியார் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் அலட்சியப்பேச்சு மாணவர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தினால் இந்த ஆண்டு 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றனர். அவர்களுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதில், சில மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தனியார் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என தெரிவித்திருந்தார். மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்த தமிழக அரசு, அவர்களின் கல்விச் செலவை ஏற்காதா..?, இந்த விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் அதிமுக, திமுகவினர், “நாங்கள் தான் இது தொடர்பான அறிவிப்பை முதலில் வெளியிட்டோம்,” என மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்களின் கல்வி கட்டண விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுவது, தற்போது அக்கட்சியின் துரைமுருகன் அளித்த பேட்டியின் மூலம் அம்பலமாகியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிருபர் ஒருவர், தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் திமுகவை அணுகினால், உதவி செய்து தருவீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், “ஃபீஸ் கட்ட முடியலனா எதுக்கு டாக்டருக்கு படிக்கிறீங்க,” எனக் கூறியபடி, அருகே இருந்தவரை பார்த்து நகைக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதை போலவே, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக ஓட்டுக்காக இதுபோன்று அரசியல் நாடகமாடுவது அம்பலமாகியுள்ளதாகவும், அரசியலுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிட வேண்டாம் என திமுகவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்.

Views: - 0

0

0