திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் கூடியது : முக ஸ்டாலின் பங்கேற்பு..!!!

Author: Babu
14 October 2020, 11:16 am
DMK - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு தலைமையில் நடந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் திமுக குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் டி,ஆர். பாலு தலைமையில் இன்று கூடியது.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளா்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூா் செல்வராஜ், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளா் திருச்சி சிவா, செய்தித் தொடா்புச் செயலாளா் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியா் அ.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 47

0

0