‘கட்சி பதவி ம***-க்கு சமம்… 10 நிமிஷத்துல வீடு ஏறிருவேன்’… தகாத வார்த்தையில் திமுக பஞ்சாயத்து தலைவரை திட்டிய கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்.. வைரல் ஆடியோ!!

Author: Babu Lakshmanan
17 June 2022, 12:15 pm
Quick Share

திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரை வாய்க்கு வந்தபடி அநாகரிகமாக திட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளரின் ஆடியோ வைரலாகி வருகிறது.

கோவை அருகே உள்ள அரிசி பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கணேசன். திமுகவை சேர்ந்த இவரும், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேர்ந்த சேனாதிபதியும் போனில் பேசி ஆடியோ ஒன்று வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.

அதில் பேசும் சேனாதிபதி, தகாதே வார்த்தைகளை பலமுறை உபயோகித்து பேசியுள்ளார். இரண்டு முறை மாவட்ட செயலர் பதவி வகித்த எனக்கு, கட்சி பதவியெல்லாம் என் முடிக்கு சமம் என்று கூறுகிறார். மேலும், அதுமட்டுமன்றி சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான் பேசுவேன் என்று கூறுகிறார்.

இதனைக் கேட்ட கணேசன், “என்ன நா, இப்படி பேசுறீங்க. இந்த வார்த்தை எல்லாம் விடாதீங்க,” என்று கெஞ்சுகிறார்.

இது குறித்து சேனாதிபதியிடம் கேட்டதற்கு, “அது நான் இல்லை. அப்படி பேசுறவன் இல்லை. அதை நான் பேசினது இல்லீங்க,” என்று மறுத்தார். ஆனால், அரிசிபாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் கணேசனிடம் கேட்டதற்கு என்னுடன் பேசியது அவர் தான் என்று கூறியுள்ளார்.

இந்த ஆடியோ விவகாரம் கோவை திமுகவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 536

0

0