திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல் ; திமுக நிர்வாகிகள் இருவரை கைது செய்த போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
4 January 2023, 9:04 am

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் பொதுக் கூட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கெண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, தி.மு.க நிர்வாகிகளான ஏகாம்பரம் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த போலீசார், உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி, அவர்களை கைது செய்ய விடாமல் தடுத்து அனுப்பினர்.

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் எழச் செய்துள்ளது. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய விடாமல் தடுத்த சம்பவத்திற்கு கண்டனங்களும் வலுத்தது.

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!