அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் : உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீஸ்..!!

20 November 2020, 6:02 pm
udhayanidhi arrest - updatenews360
Quick Share

திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள திமுக, கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முதலில் பிரச்சாரத்திற்கு களமிறக்கியுள்ளது. இன்று முதல் 100 நாட்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தனது தாத்தாவான கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க முடிவு செய்து, அங்கு அவர் சென்றார். திமுகவினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்க முற்பட்ட போது, கொரோனா காலத்தில் அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த வேனில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீசுக்கு எதிராக அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Views: - 0

0

0