அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை முடக்குவது சரியா? வேதனையில் மகளிர் அமைப்புகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 9:26 pm
Amma Scheme -Updatenews360
Quick Share

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக சார்பில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்று, வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம்.

221 Amma scooters distributed to selected applicants in Madurai | Madurai  News - Times of India

உழைக்கும் பெண்கள், பணிக்காக நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்யும்போது பஸ் நிறுத்தங்களில் வெகுநேரம் காத்திருக்கவேண்டிய அவலத்தையும், முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறி கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கும் விதமாகவும், பெண்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்வதை உறுதிப்படுத்தவும் இந்த வாக்குறுதியை 2016 தேர்தலின்போது ஜெயலலிதா அளித்திருந்தார்.

அவருடைய மறைவுக்கு பின், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் வாங்கும் இருசக்கர வாகனத்தில் 25,000 ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

Narendra Modi launches 'Amma' two-wheeler subsidy scheme on Jayalalithaa's  70th birth anniversary - Photos News , Firstpost

விண்ணப்பிக்கும் பெண் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2,50000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும், குடும்பத்தில் உள்ள ஒரு பெண் மட்டுமே இந்த இரு சக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க முடியும், இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாகனங்களை 3 ஆண்டுகளுக்கு விற்கவோ, வேறு யாரிடம் இருந்து வாங்கவோ கூடாது என்பவை முக்கிய நிபந்தனைகளாக இருந்தன.

நகர்ப்புற பெண்களை மட்டுமின்றி கிராமப் பகுதி மகளிர் இடையேயும் இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

The unpalatable truth: Six years after launch, why Amma Unavagam workers  are unhappy | The News Minute

இதேபோல் ஜெயலலிதாவால் 2013 மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் ஏழைகளின் பசிப் பிணியை போக்குவதாக அமைந்துள்ளது. குறைந்த விலையில் காலை நேர சிற்றுண்டியாக இட்லி, வெண்பொங்கல், மதியம் சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம்
தயிர் சாதம், மாலையில் சப்பாத்தி என வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 700 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் தினமும் 12 லட்சம் பேர் உணவு அருந்துகிறார்கள்.

இது இந்தியாவிற்கே முன்னோடியான திட்டம். ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து காப்பியடித்து இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த இரு திட்டங்களுக்கும் திமுக அரசு விரைவில் மூடுவிழா நடத்தி விடும்போல் தெரிகிறது. ஏனென்றால் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில், இவ்விரு திட்டங்களின் செலவினத்திற்கான தொகை எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மா இருசக்கரவாகனத் திட்டம், அம்மா உணவகம் பற்றி கூறும்போது, ” இரு சக்கர திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டது. வாகனம் வாங்க அதிகபட்ச மானியமாக வாகன விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகையே வழங்கப்படுகிறது.

Velumani vs Sivasenapathy brawl continues on poll day- The New Indian  Express

முழுக்க முழுக்க இது ஒரு மாநில அரசு திட்டமாகும். இத்திட்டத்தை தொடருவது குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 பெண்கள்,
அம்மா இரு சக்கர வாகனங்களை பெற்று பயனடைந்துள்ளனர். அரசு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும். அம்மா உணவகம் சமுதாயத்திலுள்ள நலிந்த பிரிவினருக்கு குறைந்த விலையில் சத்தான, சுகாதாரமான உணவு வழங்குவதற்காக ஜெயலலிதா, அம்மா உணவகங்களை கொண்டு வந்தார். ஆனால் பட்ஜெட்டில் அம்மா உணவகத் திட்டத்தின் செலவினங்களுக்கான நிதி ஏதும் ஒதுக்கப் படவில்லை”என்று சுட்டிக்காட்டினார்.

SHGs in Tamil Nadu will be revived, says Rural Development Minister - The  Hindu

இதற்கு பதிலளித்துப் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், “பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு சாதாரண டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் வகையிலான திட்டம் அறிவிக்கப்பட்டது. இது பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நீங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை” என்று தெரிவித்தார்.

ஆனால் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “தமிழகத்தில் உள்ள உழைக்கும் மகளிருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’. உழைக்கும் பெண்கள் தங்கள் பணி இடங்களுக்கு எளிதில் செல்வதற்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

BJP-AIADMK alliance remains strong: Vanathi Srinivasan | Deccan Herald

பெண்களின் உழைப்பால்தான் பல குடும்பங்களில் அடுப்பெரிக்க முடிகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களுக்கும் கூட, மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்த தி.மு.க. அரசு, இப்போது வேலைக்குச் செல்லும் மகளிருக்கு வழங்கிய சலுகையை ரத்து செய்வது ஏன்?

சுய தொழில் செய்பவர்கள், கடைகள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், ஆதரவற்ற மகளிர், மாற்றுத்திறனாளி பெண், கணவனை இழந்த ஆதரவற்ற பெண் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கும் மகத்தான திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக தடை செய்து விடாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் விபிபி பரமசிவம் கூறும்போது, “அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் அம்மா உணவகம் பசுமை வீடுகள் திட்டம் போன்ற மக்கள் நலம் பேணும் திட்டங்களை புறக்கணிக்கும் திமுகவின் நிதிநிலை அறிக்கையின் அவலத்தை அநாகரிக வார்த்தையின்றி ஆதாரத்தோடு அவையில் முன்வைத்து அரசுக்கு பல நல்ல ஆலோசனைகளை சொன்ன அண்ணன் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும், இது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் போது, “அம்மா உணவகத்தையும், அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தையும் திமுக அரசு, கை விடப்போவதாக வெளியாகியுள்ள தகவல் வேதனை அளிக்கிறது. ஏனென்றால் கொரோனா பரவல் காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் வயிற்றுப் பசியை போக்கியது அம்மா உணவகங்கள்தான். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வரும் ஏராளமான இளைஞர்கள் அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் சாப்பிட்டு தங்களை இக்கட்டான பொருளாதார சூழலில் இருந்து தற்காத்துக் கொள்கிறார்கள். எனவே அம்மா உணவகத்தை எக்காரணம் கொண்டு மூடி விடக்கூடாது. அம்மா உணவங்களால் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். நலிந்த பிரிவினைருக்கு சேவை என்கிறபோது இது மிகப் பெரிய தொகையே அல்ல. ஒரு வேளை நிதிச்சுமை அதிகமாகிறது என்று அரசு கருதினால் உணவுப் பண்டங்களின் விலையை சிறிது உயர்த்தலாம்.

OPS distributes two-wheelers to women - The Hindu

அம்மா இருசக்கர வாகன திட்டத்தைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அது வரப்பிரசாதம். அந்தத் திட்டத்தையும் சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண அனுமதியளிக்கும் திட்டத்தையும், எதற்காக அமைச்சர் ஒப்பிடுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஓடும் அனைத்து டவுன் பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்ற நிலை இருந்தால் கூட அமைச்சர் சொல்வதில் ஓரளவு நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ஒயிட் போர்டு டவுன் பஸ்களில் மட்டுமே பெண்கள் பயணிக்க முடியும் என்ற நிபந்தனையால் அந்த பஸ் வரும் வரை வெகு நேரம் காத்திருந்து பெண்கள் வேலைக்கு செல்லவேண்டி இருக்கிறது. இதனால் அலுவலகம் செல்லும் பெண்களில் 70 சதவீதம் பேர் சாதாரண டவுன் பஸ்களில் பயணம்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்களின் ‘சாய்ஸ்’ அம்மா இருசக்கர வாகன திட்டம்தான்.

Women can travel for free in 6,628 TN buses- The New Indian Express

உள்ளூர் சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் அதிமுக அரசிடம் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் பெண்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற்று இருப்பதால் அரசுக்கு 27 மாதங்களில் 775 கோடி ரூபாய்தான் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது. மேலும் அந்த வாகனத்தை வைத்திருப்பவர் அதன் உரிமையாளராகவும் ஆகி விடுகிறார். அவர் ஆண்டு முழுவதும் பெட்ரோல் போடும்போது கிடைக்கும் குறிப்பிட்ட சதவீத வரி தமிழக அரசுக்கும் வந்து சேர்ந்துவிடும். எனவே பெண்களுக்கான இலவச சாதாரண டவுன் பஸ் திட்டத்தையும், அம்மா இருசக்கர வாகன திட்டத்தையும் ஒப்பிடுவது சரியல்ல. அத்திட்டத்தை திமுக அரசு கைவிட்டு விடக்கூடாது” என்று வலியுறுத்தினர்.

Views: - 385

0

0