பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்ற வழக்கு : திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

Author: Babu
13 October 2020, 12:39 pm
dmk gutka - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட 2வது நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரிய திமுக எம்எல்ஏக்களின் கோரிக்கை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து திமுகவினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சபாநாயகர் அளித்த நோட்டீஸில் பிழை இருப்பதாகவும், வேண்டுமென்றால் மீண்டும் நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி, மறைந்த மற்றும் கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏக்களை தவிர்த்து முக ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக சபாநாயகர் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து மீண்டும் திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், 18 எம்எல்ஏக்களும் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 41

0

0