திமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்!!

15 June 2021, 5:31 pm
kushbu- updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி குஷ்பு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ;- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகி குஷ்பு, இணைய வாயிலாக கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறோம். திமுக இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. முதல் 3 மாத காலம் புதுமணத் தம்பதிகளை போலத்தான். ஆட்சிக்கு வந்ததுடன் தேனிலவு காலம்போலத்தான். எனவே இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது.

அதிமுக ஆட்சியின் போது ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறந்து போகுமா?

கொரோனா பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு என்னும் வாதம் முக்கியமா…? அப்படியென்றால், முன்பு 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது, ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் எனக் கூறியிருக்கலாம்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மீட்க பிரதமரும், மத்திய அரசும் கடுமையாக போராடி வருகிறது. தொற்று பாதித்த ஓராண்டுக்குள் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு கொடுத்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால் தடுப்பூசியால் உத்தரவாதம் இல்லை. போடக்கூடாது என்று இவர்கள்தான் எதிர்த்தார்கள். இப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் தடுப்பூசிதான் பேராயுதம், அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், எனக் கேட்டுக் கொள்கின்றனர்.

பெண்கள் வழிபடும் கோவில்களில் அர்ச்சகர்களாக பெண்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ புதிய திட்டம் போல இதனை பேசுகிறார்கள். 3 மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சியின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கப்படும், என்றார்.

Views: - 220

1

0