திமுக – இந்திய கம்யூ., இடையே தொகுதி உடன்பாடு : 6 தொகுதிகள் ஒதுக்கீடு… இரு கட்சி தலைவர்கள் கையெழுத்து..!!!

5 March 2021, 6:12 pm
Stalin - muththarasan - - updatenews360
Quick Share

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வததற்கான ஒப்பந்தத்தில் இருகட்சி தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை திமுக பேசியே வழிக்கு கொண்டு வந்து விடுகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்து விட்ட திமுக, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதியை ஒதுக்கீடு செய்வதாக கூறியது.

முதலில் முரண்பிடித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை, திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் மற்றும் ஸ்டாலின் அழைத்து பேசி, அவர்களை தங்களின் வழிக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து, இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0