நீதிபதி முன்பு ஒப்புக்கொண்ட பொன்முடி மனைவி… இது தான் இந்த வழக்கின் திருப்பமாக இருக்கும்… திமுக வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
21 December 2023, 2:18 pm
Quick Share

இன்று பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு அல்ல என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பொன்முடி வழக்கில் இன்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பொன்முடி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- பொன்முடி அவர்கள் 2006, 2011 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக போட்ட வழக்கில், அப்போது அவருக்கு விடுதலை கிடைத்தது. அதிமுக சார்பாக மேல்முறையீடு செய்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்து கிழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு மேலாக, எவ்வளவு தண்டனை என்பதை பொன்முடி மற்றும் அவரது துணைவியாரை நீதிமன்றத்தில் ஆஜராக கூறியிருந்தார். அவருடைய வயதை கருத்தில் கொண்டும் கிழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதில் அவர் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம். அவரது துணைவியார் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும், வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்து வருகிறார். அதில் லாபமாக வந்த ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவர் கணக்கில் வைத்திருந்தார். பொன்முடியின் குடும்பத்திற்காக 100 ஏக்கர் சித்தூரில் இருக்கிறது. இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த கணக்கை இந்த வழக்கில் கொண்டு வர முடியவில்லை.

விசாலாட்சி பொன்முடி மிக லாபகரமாக தனது தொழிலை நடத்தி வந்தார்கள் என்று ஒப்புக்கொண்டார்கள். 5 கோடி ரூபாய் வரை அவர் வருடத்திற்கு வியாபாரம் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்ததால் தான் அவர்களுக்கு சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது. பொன்முடிக்கும் அவரது துணைவியாருக்கும் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை பெற்றுத் தருவோம் என்று நம்புகிறோம்.

நீதிபதி நேர்மையானவர். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சனை. இடையில் விடுமுறை நாட்கள் வருவதை கருத்தில் கொண்டு தான் 30 நாள் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்துள்ளார். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த அதிகாரி பொன்முடி மனைவியின் வருமானத்திற்கும், பொன்முடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் கிழமை நீதிமன்றத்தில் விடுதலையானது. அதனால் கொடுக்கப்பட்ட ஜாமினை நிரந்தரமாக்குவது, இந்த தண்டனை நிறுத்துவதற்கான சாத்திய கூறுகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இதனால் திமுகவுக்கு நெருக்கடி இல்லை. திமுக பலமாக இருக்கிறது. இதைக் கண்டு பாஜக பயப்படுகிறது என்பதுதான் தெரிகிறது. 2024க்கு பிறகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பட்டியலில் பாஜகவினர் பெயரும் வரும். இது இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு, ஆவணங்களின் அடிப்படையில் நிச்சயமாக வெற்றி பெறுவோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 358

0

0