‘ உங்களின் வருகைக்காக காத்திருக்கும் தமிழகம்’ : அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஸ்டாலின் கடிதம்..!!

9 November 2020, 12:30 pm
stalin - updatenews360
Quick Share

சென்னை : அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- அன்புமிக்க திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கட்கு, அமெரிக்க நாட்டின் மகிமை தங்கிய துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்!!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.

‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்துதான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள் பேதம் இல்லை என்பதைப் போலவே, ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களை தீட்டிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்திற்கு உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கைக் கொடுத்துள்ளது.

ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆளுத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

உங்களது ஆட்சிகாலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர்தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுபவதாக அமையட்டும். தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் – ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “‘ உங்களின் வருகைக்காக காத்திருக்கும் தமிழகம்’ : அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஸ்டாலின் கடிதம்..!!

Comments are closed.