133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்!!

5 May 2021, 11:03 am
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முக ஸ்டாலின், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அப்போது, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், கேஎன் நேரு, பொன்முடி உள்பட திமுக மூத்த தலைவர்களும உடனிருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 75

0

0

Leave a Reply