மு.க. அழகிரியிடம் நலம் விசாரித்தாரா மு.க. ஸ்டாலின்..? ‘அந்த 6 நிமிட உரையாடல்தான் செம..,’ தயாநிதி டுவிட்..!

19 September 2020, 9:02 pm
stalin-alagiri-updatenews360
Quick Share

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக, இதுவரை ஒரு எம்.எல்.ஏ.க்களை கொண்டிராத பா.ஜ.க., இந்த முறை எப்படியாவது சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியில் இருந்து உருவாக்க வேண்டும் என்ற பணியில் தீவிரமாக வேலை செய்து வருகிறது.

அந்த வகையில், தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரியை தனி கட்சி ஆரம்பிக்க வைத்து, வாக்குகளை பிரித்து விடலாம் என்ற திட்டத்தையும் பா.ஜ.க. கையில் எடுத்தாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், மு.க. அழகிரிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்ற தகவல் செல்வியின் மூலம் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மதுரை திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான தளபதியை, மருத்துவமனைக்கு நேரில் சென்று, போன் போட்டு அழகிரியிடம் கொடுக்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. அவரும் அதுபடியே போன் கொடுத்து, மு.க. அழகிரியிடம் ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுமார் 6 நிமிடம் இவர்களது உரையாடல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த தகவலை அழகிரி தரப்பினர் முற்றிலும் மறுத்துள்ளனர். மேலும், இது தொடர்பான செய்தியை பகிர்ந்த அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, “கிளப்புங்கள்!!!அந்த 6 நிமிட உரையாடல்தான் செம,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் நெருங்க உள்ள வேளையில், அழகிரியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் தி.மு.க.வின் முயற்சி வீணானதாக அழகிரி தரப்பினர் கூறி வருகின்றனர்.

Views: - 0

0

0