அடிப்படைக் கல்வியின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் : முக ஸ்டாலின்

14 November 2020, 3:26 pm
stalin - baby - updatenews360
Quick Share

நாடு முழுவதும் இன்று தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 131வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான இன்றைய தினம் தேசிய குழந்தைகள் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மக்கள் நலனை உள்ளடக்கிய தேசநலனில் அக்கறை செலுத்திய பிரதமரான #JawaharlalNehru அவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம். குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம்! அனைவர்க்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எட்டி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!,,” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1327544404224032769/photo/1

Views: - 25

0

0