“திமுக தலைவருக்கு ஒரு அட்மிசன் பார்சல்”..! மூன்று லட்ச ரூபாய் சைக்கிளில் ஊர் சுற்றிய ஸ்டாலின்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

6 September 2020, 12:32 am
Stalin_Cycling_UpdateNews360
Quick Share

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அனைவரும் தவித்து வரும் நிலையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் முகக் கவசம் கூட அணியாமல், ஹாயாக ஊரைச் சுற்றிய புகைப்படத்தை திமுக ஐடி விங் தலைவர்கள் வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 1982’ஆம் ஆண்டில் திமுக இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற பின், தனக்கு 60 வயதைத் தாண்டிய நிலையிலும், தன்னை இளைஞர் போல் பாவித்து இளைஞரணிச் செயலர் பதவியை, 2017 வரை தன்னிடமே வைத்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் மக்கள் தங்கள் வாழ்வுக்காக போராடி வரும் நிலையில், எதிர்கட்சித் தலைவராக பொறுப்புடன் செயல்படாமல் வெறும் அறிக்கை அரசியலை மட்டுமே முன்னெடுத்து வரும் மு.க.ஸ்டாலின், 2021 சட்டசபைத் தேர்தலுக்கு தனது லுக்கை மாற்றும் வகையில், பல லட்சம் செலவு செய்து சிகை அலங்காரத்தையை மாற்றி தன்னை இளைஞராக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் எனும் குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது லட்சங்களில் மதிப்பு கொண்ட சைக்கிளில் ஊரைச் சுற்றும் புகைப்படும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளர் இசை என்பவர் இதைப் பகிர்ந்து, “கல்லூரி எப்போது திறக்கிறார்கள்? தலைவருக்கு UGல ஒரு அட்மிசன போட்ரனும்!” எனக் கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற திமுக நபர்களும் தங்கள் பங்குக்குக்கு தலைவர் புகழ் பாடி மகிழ்ச்சி அடைந்து கொண்டனர்.

அதே சமயம் தலைவரின் புகழ்பாடிய திமுகவினரின் பதிவுகளைப் பார்த்த நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்திய சைக்கிள் குறித்த தகவலை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு காய்ச்சி எடுத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய உல்லாச சைக்கிளின் விலை ரூபாய் 1,78,990 எனும் அதிர்ச்சித் தகவல் ஒரு பக்கம் வெளியாகியுள்ளது. மற்ற சிலரோ இந்து உண்மையில்லை என்றும் சைக்கிளின் உண்மையான விலை ரூபாய் 3,26,990 என ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

“அவனவன் சோத்துக்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான். ஆனா இவங்களுக்கு 3,27,000 ரூபாய்க்கு சைக்கிள்.” என ஒரு ட்விட்டர் பதிவர் காரசாரமாக தெரிவித்துள்ளார்.

பி.கே.’வின் ஐடியாவைப் பின்பற்றி, 2021 தேர்தலுக்காக ஸ்டாலின் தனது கெட்டப்பை மாற்றி திமுக ஐடி விங் மூலம் புகைப்படங்களை மக்களிடையே பரவ விடுவதாக கூறப்படும் நிலையில், நெட்டிசன்கள் அதை கலாய்த்து ஸ்டாலினை காமெடி பீஸாக மாற்றுவதால் திமுக நொந்து போயுள்ளது.

Views: - 0

0

0