சோத்துக்கு திண்டாடும் மக்கள் : ஸ்டாலினுக்கு 3 லட்சம் மதிப்பில் சைக்கிள் தேவையா? நெட்டிசன்கள் கேள்வி!!

6 September 2020, 10:54 am
Stalin 1 - Updatenews360
Quick Share

கொரோனா தாக்கம் இன்னும் மக்கள் மனதில் இருந்து விடை பெறாமல் இருக்கிறது. நாட்டையே உலுக்கிய கொரோனா தொற்றால் மக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில், சோத்துக்கே வழியில்லாமல் பலரது நிலைமை சொல்லி மாளாது.

ஆனால் யார் எப்படி போனால் நமக்கென்ன என்று பொதுவாழ்வில் ஈடுபட்ட நபர் இப்படி செய்து நியாயமா என டிவிட்டரையே அதிர வைத்து வருகின்றனர். அந்த நபர் வேறு யாரும் இல்லை, திமுக தலைவர் ஸ்டாலின்தான்.

டிவிட்டரையே கதிகலங்க வைத்த அந்த பதிவுகள் முழுவதும் ஸ்டாலினை பற்றி ஏக வசனத்திற்கு பேசி, ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோக்ள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகின்றனர். திமுக ஐடி விங் இந்த புகைப்படங்களை புகழ்ச்சிக்காக பரப்பி , ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுகிறார், அவர் எப்போதும் இளமை மாறாமல் உள்ளார் என காட்டிக்கொண்டனர்.

ஆனால் நம்ம நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா, இளமையாக இருக்கிறார் அப்போ கல்லூரி எப்போ திறக்கறாங்க, அவருக்கும் UGல ஒரு அட்மிஷன் போடணும்னு கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். இது மட்டுமா இன்னும் எக்கசக்கமான கமெண்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

சைக்கிளின் விலையை கேட்டால் தலை சுற்றி கீழே விழுந்துவிடுவோம். சும்மா இல்லைங்க, 3 லட்சத்து 26 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள சைக்கிளில் ஒய்யாரமாக ஸ்டாலின் பவனி வருவதாக சாட்சியோடு பதிவிட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலால் வெளியே செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், கைகழுவ வேண்டும் என அரசு விதித்த கட்டுப்பாடுகளை எடுத்துக் கூறும் ஸ்டாலின், சைக்கிள் பயணத்தில் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளது, ஊருக்கு மட்டும் உபதேசமா என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

சோத்துக்கே கஷ்டப்படும் சூழலில் சைக்கிள் வாங்குன காசுல எத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு பசிய போக்கிருக்கலாம், ஏழை மாணவர்களுக்கு லேப்டாப், ஆன்லைன் வகுப்பு தொடர முடியாத மாணவர்களுக்கு செல்போனாவது வாங்கி கொடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 8

0

0