பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்க : ஆளுநரிடம் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

24 November 2020, 1:28 pm
dmk - stalin - governor meet - updatenews360
Quick Share

சென்னை : பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் அந்த தீர்மானத்தின் மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். தமிழக அரசு மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் முக ஸ்டாலின் பேசுகையில், ” முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக அவர் பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், 7 பேர் விடுதலையில் ஏற்பட்டு வரும் காலதாமதத்திற்கான சட்ட விளக்கங்களையும் ஆளுநர் தந்தார். ஆளுநருடன் வேறு விஷயங்களும் பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது, எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0