திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு : கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை..!!

4 May 2021, 7:57 pm
stalin- updatenews360
Quick Share

சென்னை : திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறைப்படி, ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில், மூத்த தலைவர்களான துரைமுருகன், கேஎன் நேரு, பொன்முடி உள்பட 133 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Views: - 112

0

0

Leave a Reply