எம்பியிடம் சாதி பாகுபாட்டை காட்டிய ஸ்டாலின் : மேடைக்கு கீழ் தனி இருக்கை ஒதுக்கி அவலம்… நடவடிக்கை கோரி மனு…!!

26 February 2021, 2:09 pm
Stalin- Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுவாக, எந்த ஊரில் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அல்லது எம்எல்ஏ, எம்பி ஆகியோரை மேடையில் தனக்கு அருகே இருக்கையில் அமரச் செய்தே, ஸ்டாலின் பேசி வந்தார்.

ஆனால், ஈரோடு மாவட்டப் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிற பிரச்சாரக் கூட்டங்களில் கட்சியின் சக நிர்வாகிகளை மேடையில் அமரச் செய்த ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்பி அந்தியூர் செல்வராஜை மட்டும் மேடைக்கு கீழே ஒரு இருக்கை போட்டு அமரச் செய்தது ஏன்..? என்ற கேள்வி எழுந்தது.மேலும், மேடையில் அவர் பேசியதாவது :- கடந்த 2008ம் ஆண்டு அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது நான்தான். அதனை பெருமையுடன் சொல்கிறேன். பொல்லானுக்கு முதலமைச்சர் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அருந்ததியினர் மீது தற்போது என்ன திடீர் பாசம் வந்தது. 2019ம் ஆண்டே பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததே நான்தான், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சும், செயலும் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. அதாவது, கட்சியின் துணை பொதுச்செயலாளர், எம்பி பதவியை அந்தியூர் செல்வராஜுக்கு திமுக கொடுத்திருந்தாலும், அவருக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்திருக்கலாம். மாறாக, மேடைக்கு கீழே தனியாக ஒரு இருக்கைக் கொடுத்தது ஏன்..? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல, அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்தாலும், அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு எம்பிக்கே இவ்வளவுதான் திமுக மதிப்பு கொடுக்கிறது என்றால், சாதாரண மக்களுக்கான நிலை என்ன..? என்றும் ஸ்டாலினை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்தியூர் செல்வராஜ் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து கொண்ட சம்பவம், பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பொதுக் கூட்டம் ஒன்றில் எம்பி அந்தியூர் செல்வராஜை சாதிய பாகுபாடு காட்டும் விதமாக, தனி இருக்கையில் மேடைக்கு கீழே அமரச் செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய எஸ்சி ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 105

0

0