மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக கோவில் கட்டும் துர்கா… ‘பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது’ : கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

2 September 2020, 2:29 pm
stalin - updatenews360
Quick Share

பொதுவாக தி.மு.க. குடும்பம் என்றாலே கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தில் அவரது மருமகளும், ஸ்டாலினின் மனைவியுமான துர்கா ஸ்டாலின் சற்று வித்தியாசமானவர். கடவுள் நம்பிக்கை கொண்டவர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியவர்.

குடும்பத்தாருடனான போட்டிக்கு மத்தியில் தி.மு.க. தலைவர் பதவியை பெற்ற தனது கணவர் ஸ்டாலின், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக வேண்டும் என வேண்டி, கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஒரு படி மேலே போயி, தனது கணவரின் முதலமைச்சர் கனவை நினைவாக்க வேண்டும் என்று வேண்டி, நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வக் கோவிலான அங்காளம்மன் கோவிலை, தனது சொந்த செலவில் புனரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோவிலின் பரிகார மூர்த்திகளை புனரமைத்து கட்டப்படும் மண்டபங்களின் கட்டுமானப் பணிகளை துர்கா பார்வையிட்டார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்த துர்கா ஸ்டாலினின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்டாலினின் எதிர்காலத்தை கணித்த குடும்ப ஜோதிடரின் ஆலோசனையின்படியே, குல தெய்வம் கோவிலை துர்கா ஸ்டாலின் புனரமைத்து வருவதாகவும், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களில் பவுர்ணமி தினத்தில் வழிபாடு நடத்த இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாய் திறக்காதது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. எனவே, ‘பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது’ என துர்கா ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Views: - 0

0

0