அரசு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை….மக்கள் பணத்தில் சுய விளம்பரம் தேடும் திமுக…வலுக்கும் எதிர்ப்பு!!

28 October 2020, 2:34 pm
dmk issues - updatenews360
Quick Share

திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதற்கு மநீம உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஆலத்தூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் புகைப்படங்களுடன், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

stalin phone - updatenews360

இந்த நிழற்குடையை எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதுவரை எந்த அரசுப்பதவியும் வகிக்காத உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அரசு நிதியில் அமைக்கப்பட்ட நிழற்குடையில், ஒரு தனிப்பட்ட கட்சியின் நிர்வாகி புகைப்படத்தை எப்படி வைக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, இதுகுறித்து பிறகு பேசுகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். ஆட்சியில் இல்லாத போதே மக்கள் பணத்தில் சுய விளம்பரம் தேடும் திமுக கட்சி, ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலைமை என்னவாகுமோ?..

Views: - 26

0

0