கேப்டனே இல்லாத கப்பல் அதிமுக… திராவிட மண்ணில் பாஜகவிற்கு இடமில்லை : திமுக அமைச்சர் விமர்சனம்… அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 6:59 pm
Mano Thangaraj - Updatenews360
Quick Share

பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருக்கிறது. கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! தலைமையும் இல்லை, என்ற நிலையில் உள்ளது. தமிழ்நாடு திராவிட மண் இங்கு பாஜகவிற்கு இடமில்லை, பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்.’ என பதிவிட்டுள்ளார்.

அதிமுக உட்கட்சி பிரச்சனை குறிதது ஆளுங்கட்சி அமைச்சர் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் திமுக அமைச்சர்கள் அடுக்கடுக்கான புகார்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜின் விமர்சனம் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 312

0

0