டெல்லியிடம் இருந்து அதிமுகவை மீட்பவர்கள்தான் தலைமைக்கு வரனும் : தி.க. தலைவர் கி.வீரமணி விருப்பம்!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 6:06 pm
Quick Share

மதுரை : மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிடர் கழகத்தினர் சார்பில் செயலவைத்தலைவர் அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி பேசியபோது :- பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்தேர்வில் அதிக தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும், திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, உயர்நீதிமன்ற பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம், முடி திருத்த போகலாம் என பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுவது இளைஞர்களின் கோபத்தை தூண்டுகிறது. வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, அக்னிபாத்திற்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடி வருகின்றனர்.

மதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான். மதுரை ஆதினம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம். பட்டினபிரவேசம் என்றால் என்ன என்பது தெரியவந்தது போல, சனாதானத்தில் ஆதினம் என்றால் யார் என்பதையும் அனைவருக்கும் தெரியட்டும்.

பாஜக எதிர்கட்சிகளை ஒன்றிணையாமல் பிரித்தாளுகிறது. தமிழகத்தில் எதிர்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும் என்பதையும், யார் வரக்கூடாது என்பதையும் திட்டமிட்டு நடத்துகிறது பாஜக.

2024 தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதிமுகவினர் திராவிடர் கழகம் தாய் கழகம் என்பதையும் மறந்துவிட்டார்கள். அதிமுகவின் தாயாக இருந்த அம்மாவையும் மறந்துவிட்டார்கள். அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது. லேடியா? மோடியா என கேட்ட அம்மாவின் கொள்கைக்கு எதிராக திசைமாறி செல்கின்றனர்.

அதிமுகவை யார் டெல்லியில் இருந்து மீட்கும் தலைமையோ அவர் வரட்டும். அதிமுகவின் பொதுக்குழுவால் புதுக்குழு தான் உருவாகிறது. அதிமுக தங்களது அடமானத்தை மீட்டு தமிழ்மானம் காக்க வேண்டும். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது, என்றார்.

Views: - 518

0

0