ஐசியூவில் திமுக எம்எல்ஏ பூங்கோதைக்கு சிகிச்சை : மருத்துவமனை நிர்வாகம்

19 November 2020, 4:00 pm
Quick Share

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏ பூங்கோதை தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சீவலப்பேரி பாண்டியன் என்பவர் எம்எல்ஏ பூங்கோதையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதில், குடும்ப உறுப்பினர்களிடையே போட்டி எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட மன விரக்தியால், நேற்றிரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் மயக்க நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதையின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சுயநினைவு இல்லாத நிலையில் திமுக எம்எல்ஏ பூங்கோதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பூங்கோதை சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் உடல்நிலையுடன் உள்ளார்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் பூங்கோதை விழிப்புடன் உள்ளார், உடல்நிலை சீராக உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0