மைக்கை பிடிங்கி எம்எல்ஏ பூங்கோதையை கேலி செய்த திமுகவினர் : தூக்கமாத்திரையை எடுக்க காரணம் இதுவா.?அதிர்ச்சியில் உ.பி.க்கள்!!

20 November 2020, 11:26 am
Poongothai_Aladi_Aruna - dmk mla 1- updatenews360
Quick Share

சென்னை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். திமுகவில் உட்கட்சிப் பூசலால் ஏற்பட்ட மோதலில் அவர் பொது இடத்தில் அவமரியாதையாக நடத்தப்பட்டதால் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் மூத்த தலைவராக விளங்கியவர் ஆலடி அருணா. இவர் திமுகவில் சேர்ந்து இறுதிவரை அந்தக் கட்சியில் இருந்தார். அவரது மகள் பூங்கோதை ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். மறைந்த கருணாநிதி அமைச்சரவையில் அவர் இடம்பிடித்து திறம்படப் பணியாற்றினார். அவர் திமுக மகளிர் அணித் தலைவி கனிமொழிக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஆனால், திமுகவில் உதயநிதிக்கு ஆதரவாக இருப்பவர்கள் கனிமொழியையும், எதிர்ப்பதால் பல மாவட்டங்களில் கோஷ்டிப்பூசல் நடந்து வருகிறது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கனிமொழியை தென் மண்டல திமுக பொறுப்பாளராக்கலாம் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். இதை எதிர்த்து உதயநிதி சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிறுத்தப்படுகிறார். இதனால், தென் மாவட்டங்களில் கட்சிக்குள் கடும் புகைச்சலும் மோதலும் வெடித்துள்ளது.

இந்நிலையில், பூங்கோதைக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக திடீரென ஒரு தகவல் வெளியானது. அதேசமயம், உட்கட்சி பூசல் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Poongothai_ cover 1 updatenews360

அண்மையில் நியமிக்கப்பட்ட சிவ பத்மநாபன், துரை என்ற இரு மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளினால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடையத்தில் நேற்றுமுன்தினம், கட்சி மீட்டிங் நடந்துள்ளது. அப்போது அந்த மாவட்டச் செயலாளர்களுமே அதில் பங்கேற்றுள்ளனர். அப்போது, மைக்கைப் பிடுங்கி இருவரும் அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பெண்களை மதிக்கும் இயக்கம் பெண்ணுரிமைக்காக பல திட்டங்களையும் நிறைவேற்றியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறிக்கொள்வார். ஆனால், திமுகவில் கட்சிக்கு உள்ளேய பெண்கள் அதுவும் முன்னாள் அமைச்சராக இருந்த பூங்கோதை போன்றவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.


திமுகவில் பல மட்டங்களிலும் மாவட்டங்களிலும் நடந்துவரும் கோஷ்டிப் பிரச்சினைகளை பூங்கோதைக்கு நேர்ந்த நிலைமை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், திமுக இருக்கும் நிலையில் ஸ்டாலின் அனைத்து அறிக்கைகளிலும் பேச்சுகளிலும் திமுக வெற்றிபெறும் என்று எந்த நம்பிக்கையில் கூறிவருகிறார் என்று பொதுமக்கள் சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர். கட்சியில் இருக்கும் பல கோஷ்டிகளும் உட்பகையும் மோதல்களும் வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்கும் என்ற கவலையில் உடன்பிறப்புகள் மூழ்கியுள்ளனர்.

Views: - 15

0

0