தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏவின் உடல்நிலையில் பாதிப்பா..? மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர முடிவு
20 November 2020, 12:37 pmசொந்த கட்சியினரே பொது இடத்தில் அவமதிப்பு செய்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏ பூங்கோதை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்படுகிறார்.
தென்காசி மாவட்டம் கடயத்தில் நேற்று முன்தினம் நடந்த திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். அப்போது, மைக்கை பிடுங்கி, அவரை பேச விடாமல் தடுத்து, சக கட்சி நிர்வாகிகள் கேலி செய்து சிரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த எம்எல்ஏ பூங்கோதை, அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் உடல்நிலையுடன் உள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் பூங்கோதை விழிப்புடன் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் இன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0