அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா..! திருச்சி மருத்துவமனையில் அனுமதி

18 August 2020, 9:27 pm
Quick Share

சென்னை: அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களை கொரோனா தாக்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தோன்றியதால் அவர் அதற்கான பரிசோதனை மேற்கொண்டார்.

அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து, செந்தில் பாலாஜி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.