‘யார்ரா அவ…. அந்த நாய தூக்கி வெளிய வீசுங்க’ : தி.மு.க. தொண்டரை எம்.பி., ஆ.ராசா ஆவேசமாக திட்டும் வீடியோவால் சர்ச்சை..!

29 September 2020, 1:33 pm
a raja -- updatenews360
Quick Share

பெரம்பலூர் : போராட்டத்தின் போது பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய தி.மு.க. தொண்டனை, தகாத வார்த்தைகளால் அக்கட்சியின் எம்.பி. திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தி.மு.க.வின் எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு தொண்டர்களிடையே பேசினார். வேளாண் மசோதாக்களினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்று கையில் பேப்பர் வைத்தபடி, தொண்டர்களின் முன்பு வாசித்து கொண்டிருந்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த தி.மு.க. தொண்டர் ஒருவர், ‘ஆ.ராசா வாழ்க,’ என முழக்கமிட்டார். இதனால், தனது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டு விட்டதாகக் கருதிய ஆ.ராசா, பொறுமையை இழந்து, ‘யார்ரா அவ…. அந்த நாய தூக்கி வெளிய வீசுங்க’ என ஆவேசமாக திட்டினார். இது சக தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘கோஷம் போடவில்லையென்றாலும் திட்டுறாங்க, கோஷம் போட்டாலும் திட்டுறாங்க… இவங்க எந்த நேரத்தில் எந்த மூடு-ல இருக்காங்கங்கன்னே தெரியலடா சாமி’ என நினைத்துக் கொண்டு கப்சிப் ஆகினர்.

என்னதான், தொண்டர் கட்சியின் மீதோ அல்லது சம்பந்த தலைவனின் மீதோ உள்ள விஸ்வாசத்தினால், உரையின் போது முழக்கம் எழுப்பியிருந்தாலும், இது போன்று கடிந்து கொண்டு, தரக்குறைவாக திட்டுவது ஒரு நல்ல தலைவனுக்கு அழகல்ல… என்ற கருத்து ஆ.ராசாவின் காதுகளுக்குள் விழுந்து கொண்டே இருக்கிறது.

Views: - 1

0

0