முதலமைச்சர் குறித்து ஆபாச பேச்சு… ஆ.ராசாவின் பிரச்சாரத்திற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்

Author: Babu Lakshmanan
27 March 2021, 4:21 pm
EPS - a rasa - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக எம்பி ஆ.ராசாவின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சாரத்தின் போது அரசியல் நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி திமுகவினர் பேசி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை ஆபாசமான வார்த்தைகளை கூறியை திமுகவின் எம்பி ஆ.ராசா தவறான வார்த்தைகளை கூறி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

eps - a raja - - updatenews360

திமுக எம்பி ஆ. ராசா பேசியதாவது :- ஓராண்டு காலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையில் கொடுத்த விளம்பரத்தால் பத்திரிக்கைகள் அவரை புகழ்ந்து பேசுகின்றனர். நல்ல உறவில் சுகப்பிரசவமாக பிறந்தவர் ஸ்டாலின். கள்ள உறவில் குறைப்பிரசவமாக பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி,” என பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது திமுக மீது பொதுமக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும், ஆ.ராசாவின் பேச்சிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் பேசி வரும் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், இனிவரும் காலங்களில் அவர் எந்தவித தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Views: - 101

0

0