கொரோனாவை அலட்சியம் செய்து திமுக நடத்திய பேரணி: எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது வழக்கு

Author: Aarthi
6 October 2020, 9:16 am
dmk meet2 - updatenews360
Quick Share

சென்னை: அரசின் விதிமுறைகளை மீறி நேற்று பேரணி நடத்திய திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. பேரணிக்காக சென்னை சின்னமலை, ராஜீவ்காந்தி சிலை அருகே தி.மு.க. மகளிர் அணியினர் கூடினர்.

பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். பேரணி, கனிமொழி எம்.பி. தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்றது.

பேரணி ஆளுநர் மாளிகையை நெருங்கும் நிலையில் போலீசார் இரும்பு தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும், பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பேரணியில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, திமுக எம்.பி கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 77

0

0