‘வாரிசு’ பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசக் கூடாது : திமுக எம்பி கனிமொழி பதிலடி..!!

Author: Babu Lakshmanan
30 November 2022, 10:22 am
Quick Share

வாரிசு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லக்கூடாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

நேற்று ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதி ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்ததாவது;- கவர்னர் பதவி காலாவதியானது என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருப்போம். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை, என கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தகுதியை வைத்துதான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் இல்லை; விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், எட்டையாபுரம் ரோடு ஏவிஎம் கமல்வேல் மஹால் புத்தக திருவிழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தகுதியை வைத்துதான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் இல்லை என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது குறித்து கேட்டதற்கு, ‘அவங்க அதெல்லாம் சொல்லக்கூடாது,’ என தெரிவித்தார்.

Views: - 321

0

0