மீண்டும் சார்ஜ் எடுத்த சுந்தர்… தொடர்ந்து சொதப்பும் SKY… முன்னணி பேட்டர்களால் தடுமாறிய இந்திய அணி.. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துமா?

Author: Babu Lakshmanan
30 November 2022, 11:36 am
Quick Share

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்கள் சொதப்பினர். கில் (13), தவான் (28), பண்ட் (10), சூர்யாகுமார் யாதவ் (6),தீபக் ஹுடா (12) என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர்.

ஒருகட்டத்தில் இந்திய அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. மறுபுறம் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஷ் ஐயரும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால், இந்திய அணி 200 ரன்களை தொடுவதே சந்தேகமாகியது.

இந்த நிலையில், களத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். இதனால், 47.3 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் அடித்து, கவுரவமான இலக்கை நிர்ணயம் செய்ய காரணமாக இருந்தார்.

இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அணி பந்துவீசி வருகிறது.

Views: - 346

0

0