தி.மு.க., எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி : அரசியல் தலைவர்களை புரட்டி போடும் நோய் தொற்று..!

3 August 2020, 5:07 pm
MP ramalingam - updatenews360
Quick Share

நாகை : தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் எம்.பி. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி, பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளிலோ அல்லது வீடுகளிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி தி.மு.க. எம்.பி. சே.ராமலிங்கத்திற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0