டிகேஎஸ் இளங்கோவன் ஒரு மென்மையான தலைவர் : அவரப் போயி பிடிஆர் இப்படி பேசலாமா…? கொளுத்திப் போட்ட பாஜக..!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 11:39 am
tks - ptr - dmk - updatenews360
Quick Share

திமுக எம்பி இளங்கோவனை மறைமுகமாக தரக்குறைவாக பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் புறக்கணித்தார். கொளுந்தியாவின் வளைகாப்பில் பங்கேற்பதற்காகவே, அவர் ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், இல்லாத கொளுந்தியாள் வளைகாப்புக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று பொய் சொல்கிற முட்டாள்களே என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Minister PTR - Updatenews360

எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு தரம் தாழ்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து வருவது சக அமைச்சர்கள் மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் வைப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எளிதில் எரிச்சல் அடைகிறார் என்று போட்டுத்தாக்கினார். மேலும், அவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றிருக்க வேண்டும்என்றும் கூறியிருந்தார்.

தன்னைப் பற்றி இப்படி பொதுவெளியில் டிகேஎஸ் இளங்கோவன் பேசிய நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், யார் பெயரையும் குறிப்பிடாமல் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி டுவிட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதாவது, “முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்குவதற்கு கூட தகுதியில்லாத நபர் என்பதை சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அது சரியாகத்தான் இருக்கிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, என்ன நினைத்தாரோ அவர், மீண்டும் அந்த பதிவை நீக்கம் செய்துள்ளார். ஆனால், அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழனிவேல் தியாகராஜன் மறைமுகமாக திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவனைத்தான் திட்டிப் பதிவை போட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஒரு அமைச்சர் தனது பதவியையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த செயலுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பொதுவாக மற்ற கட்சி விவகாரங்களில் நான் தலையிடுவது இல்லை.ஆனால், இன்று நிர்பந்திக்கப்பட்டேன். திமுகவில் உள்ள தலைவர்களில் மிக மென்மையான, பண்பானவர் திரு.டி கே எஸ் இளங்கோவன் அவர்கள். அவருடன் பல விவாதங்களில் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

தி மு க குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் நான், அவருடன் பங்கேற்கும் போது சற்றே கடுமையை குறைத்து கொண்டதுண்டு. அந்த அளவிற்கு மென்மையானவர்.தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். தமிழக நிதியமைச்சர் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை நேர்மறையாக எடுத்து கொண்டு தன்னை திருத்தி கொள்ள வேண்டியவர்.

அவரை தரம் தாழ்ந்து விமர்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தான் மேலானவன் என்ற அகம்பாவம் இருப்பதை விட மற்றவர்கள் தன்னை விட கீழானவர்கள் என்ற எண்ணம் இருப்பவர்கள் நாட்டிற்கு கேடானவர்கள், சமுதாயத்திற்கு தீங்கானவர்கள். முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 197

0

0