காங்கிரஸின் மறுஉருவமான தி.மு.க. : அதிருப்தியில் தலைமைக்கு மாறி மாறி எம்.பி.க்கள் கடிதம்..! ஒதுக்கிய ஸ்டாலின்..!

21 September 2020, 11:42 am
Stalin-03-updatenews360
Quick Share

தமிழக சட்டசபை தேர்தலுக்கான காலம் மெல்ல மெல்ல நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளிடையே உட்கட்சி பூசலும் வெடிக்க ஆரம்பித்து விட்டன. குறிப்பாக, முக்கிய கட்சிகளாக அ.தி.மு.க., தி.மு.க.விலும் முட்டல்கள், மோதல்கள் தென்பட்டு வருகின்றன. அதிலும், தி.மு.க.வில் உதயநிதியால் பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் நிலவி வரும் நிலையிலும், தற்போது பழைய பிரச்சனையே மீண்டும் உயிர்பிக்கத் தொடங்கியுள்ளது.

சோனியா காந்தியின் தலைமையை விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸில் வலிமையான தலைமை இல்லாததை இது அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், காங்கிரஸ் பாணியையே தி.மு.க.வினரும் தற்போது கையில் எடுத்துள்ளனர். தி.மு.க. எம்.பி.க்கள் சிலர், அக்கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பது அக்கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே, உதயநிதியின் தலையீட்டை விரும்பாத தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகளை பிடிக்காத தலைவர்கள் என மற்றொரு குரூப்பும் கிளம்பி விட்டது. அந்த குழுவினர், தேர்தல் ஆலோசகராக பல கோடி கொட்டி கொடுத்து பணியமர்த்தப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரிடம், கட்சியை ஒப்படைத்ததை ஜுரணிக்க முடியவில்லை என வெளிப்படையாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தொண்டர்களுடன் தொடர்பில் இருக்கும் கட்சியான தி.மு.க., தற்போது ஒரு கம்பெனி போல நடத்தப்பட்டு வருவதாகவும், பிரசாந்த் கிஷோர் போன்ற ஆட்களின் பேச்சை கேட்டு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமைக்கு போர்க்கொடி தூக்கிய மூத்த தலைவர்களை சோனியா காந்தி எப்படி ஓரங்கட்டினாரோ, அதேபோல, கடிதம் எழுதிய எம்.பி.க்களையும் ஸ்டாலின் ஒதுக்கி விட்டாராம். அவர்களை சந்தித்தே 3 மாதங்களுக்கு மேல் ஆகிரதாம்.

ஸ்டாலின் இந்த நடவடிக்கை தொண்டர்களை விட, கார்ப்பரேட் கைக்கூலியைத் தான் அதிகம் நம்புவது போன்று இருப்பதாக அதிருப்தி தலைகள் சொல்லி புலம்பி வருகின்றனர்.

Views: - 5

0

0