ஒரே எதிரி திமுக தான்…வலுவோடு எதிர்கொள்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..!

Author: Babu
7 October 2020, 12:02 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவிற்கு ஒரே எதிரி திமுகதான் என்றும், அதனை வலுவோடு எதிர்கொள்வோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : அதிமுக மகத்தான மக்கள் இயக்கமாகும். மக்கள் ஆட்சியே நடந்து வருகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை மொத்த நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். அதனை நாங்கள் வலுவோடு எதிர்கொள்வோம். வெற்றியும் பெறுவோம், எனக் கூறினார்.

முன்னதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் பென்னையன் பேசுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என எடப்பாடி பழனிசாமி கூறவில்லை. இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை அமோக வெற்றி பெறும்,” எனத் தெரிவித்தார்.

Views: - 67

0

0