சர்வதேச மாஃபியா கும்பலுடன் திமுக ஊராட்சி தலைவருக்கு தொடர்பு : மகனும் சிக்கியதால் அடுத்தடுத்து திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 7:36 pm
DMK Arrest -Updatenews360
Quick Share

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி திமுக ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் மகாலிங்கம் என்கிற மகாலிங்கம் உள்ளார்.

இவருக்கு இலங்கை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் டெல்லியில் ஒரு வாகனத்தில் சோதனை செய்கின்றனர்.

அந்த வாகனத்தில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஐஸ் மச்சா என்று சொல்ல கூடிய போதை பொருள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வாகனத்தின் ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்த போது நாகப்பட்டினத்தில் சேர்ந்த மகாலிங்கத்திடம் ஒப்படைக்க செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் உதவியாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

சோதனையில் எந்த போதைப்பொருளும் சிக்காத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் கீழையூர் ஒன்றிய குழு உறுப்பினர் அலெக்ஸ் ஆகியோரை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருவரையும் நேற்று இரவு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் இருந்து கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சென்னையிலிருந்து வந்த தேசிய போதை பொருள் அதிகாரியிடம் கடலூரில் ஒப்படைத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 469

0

0