நாற்பதும் நமதே, நாடும் நமதே.. இனி தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொடரும் : முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 9:13 pm
MK Stalin - Updatenews360
Quick Share

தமிழகத்தை இனி திமுக தான் ஆட்சி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை 54 தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளோம். தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா; தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது. ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது.

பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை இனி திமுக தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து சொல்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போது இருந்தே ஆற்ற வேண்டும், நாற்பதும் நமதே, நாடும் நமதே. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 480

    0

    0