சூரியனை மறைத்த திமுக.. முகத்தை மறந்த சீனியர்கள் : அடையாளத்தையே அழிச்சிட்டீங்களே.. கொந்தளித்த உடன் பிறப்புகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 6:00 pm
Karunanithi Photo -Updatenews360
Quick Share

சென்னை : கட்சிக்கு வித்திட்ட கலைஞனை மறந்த திமுகவின் பேனரால் தொண்டர்கள் கொந்தளித்ததுடன் முதலமைச்சருக்கு புகாரும் அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக என்ற ஒற்றை கட்சிக்கு ஒரே விதைதான்… தான் மறையும் வரை தலைவராக பதவி வகித்தவர் கலைஞர் என தொண்டர்களால் அழைக்கப்பட்ட கருணாநிதி. 5 முறை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர். 13 முறை எம்எல்ஏவாக இருந்தவர். இந்த சாதனை மிகப்பெரியது. திருவாரூர் தொகுதியில் போட்டியில் கடந்த 2016 தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கருணாநிதி.

Karunanidhi: Get to Know about M Karunanidhi's Life, Karunanidhi Family,  Wives, Karunanidhi Death

முத்துவேல் கருணாநிதி, திமுகவில் அங்கம் விகித்து.. திமுகவின் முகமாகவே மாறியவர். இவர் ஏற்ற பதவிகள் எண்ணற்றவை. சட்டமேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ஒரு பக்கம் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், மறுபுறம் தனக்கு சோறு போட்ட கலைத்துறைக்கு தொடர்ந்து சேவையாற்றியவர். இலக்கியவாதி, கதை திரைக்கதை வசனம், நாடக ஆசிரியர், கவிதை ஆசிரியர் என பன்முகத்தை கொண்ட கருணாநிதி அவர்கள் திமுகவின் முகம் என்பதை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் மறந்தது ஏனோ?

Why Karunanidhi became an Indian nationalist from being a Tamil secessionist

தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி 5 தலைமுறை தலைவர்களை சந்தித்து அரசியல் செய்தவர். 1969ஆம் ஆண்டு திமுக தலைவராக தேர்வு செய்யப்ப்டட அவர் தனது உயிர் பிரியும் வரை தலைவராகவே இருந்து அரும்சாதனை படைத்தவர்.

என் உயிரினும் என தொடங்கும் வார்த்தை சொல்லி முடிப்பதற்குள் தொண்டர்கள் ஆரவாரம் ஓயவே ஓயாது. அந்த வார்த்தையை கேட்கவே தவம் கிடந்த தொண்டர்கள் ஏராளம். இவரின் பேச்சால் அரசியலுக்கு வராதவர்கள் கூட அரசியலுக்கு வந்த வரலாறும் உண்டு.

Muthuvel Karunanidhi: From failing Class X to changing the social fabric of  Tamil Nadu | Research News,The Indian Express

இப்படி தனது பேச்சால், திறமையால், கடின உழைப்பால் திமுக என்ற விருட்சத்திற்கு ஆணி வேராக இருந்த கலைஞர் கருணாநிதியின் புகைப்படங்கள் இல்லாமல் திமுகவில் எந்த விளம்பரங்களும் வெளிவராது.

ஆனால் இதை நாளுக்கு நாள் மறந்தது போல் இன்று கருணாநிதியின் புகைப்படம் இல்லாமல் ஒரு பேனர் உள்ளதை கண்ட தொண்டர்கள் தொண்டை அடைத்து நிற்கின்றனர். சென்னை மயிலை கிழக்கு பகுதி திமுக சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக வைக்கப்பட்ட திமுக பேனரில் கருணாநிதி முகம் இல்லாமல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புகைப்படம்

அந்த பேனரில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலை நிர்வாகிகள் புகைப்படம் உள்ளது. ஆனால் திமுகவின் அடையாளமாக திகழ்ந்த கருணாநிதியின் போட்டோ காணாததால் தொண்டர்கள் வேதனையடைந்தனர்.

தந்தை கொடுத்த பதவியில் உள்ள ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு இது குறித்து புகார்கள் தொண்டர்கள் கொண்டு சென்றுள்ளனர். தலைவரை மறந்து வைத்தார்களாக மறைத்து வைத்தார்களாக என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் குரலெழுப்பி வருகின்றனர்.

Views: - 277

0

0