நீங்க இந்து ஆதரவாளரா…? விரோதியா…? : மு.க. ஸ்டாலின் முன்பு வைக்கப்பட்ட கேள்வி..?

4 September 2020, 6:39 pm
Stalin 01 updatenews360
Quick Share

பிரபல தனியார் இதழ் வெளியிட்ட பதிவிற்கு கருத்து கூறிய வாசகர் ஒருவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில், அவர் கேட்டிருப்பதாவது :-

அண்மையில் முடிந்த விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மலையாள மக்களின் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து மடலை வெளியிட்டது தமிழக இந்துக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையிலும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, விநாயகர் சிலையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதவிட்டிருந்தார். திமுகவின் கொள்ளை இந்து விரோத போக்கு அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கி, நடுநிலை இந்துக்களின் வாக்குகளை கவர முயற்சித்தார். கறுப்பர் கூட்டத்தின் பின்புலம் தி.மு.க. இருப்பதாக இருக்கும் கறையை கழுவவும் முயன்றார்.

உதயநிதியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவராக காட்டிக் கொண்டு, விநாயகர் சிலையை வைத்து புகைப்படம் எடுத்து, இந்துக்களின் வாக்குகளை கவர முயற்சிப்பதா..? என தாறுமாறாக உதயநிதிக்கு கேள்விகளை எழுப்பினர்.

இதனால் மிரண்டு போன உதயநிதி மறுநாள் விளக்கம் ஒன்றை கொடுத்தார். அதில், “எனக்கும், எனது மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனது தாயார் மட்டும் சாமி கும்பிடுவார். மகள் விநாயகரை பற்றி கேட்டதால் புகைப்படத்தை எடுத்தேன்.,” என மலுப்பலான பதிலை தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள், “மகள் கேட்டாராம்… இவர் விநாயகரோடு செல்பி எடுத்து காண்பித்தாராம். சரி அப்படியே இருந்தாலும், அதனை எதற்கு சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நான் சாமி கும்பிடுவதில்லை. என் தாய்தான் கும்பிடுகிறார். நான் பக்கா தி.மு.க. காரன் என விளம்பரப்படுத்தி, அறிக்கை வெளியிட வேண்டும்,” எனக் கேட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடுநிலை இந்து வாக்காளர்களின் வாக்குகளை கவர பல்வேறு விதங்களிலும் தி.மு.க.வின் தலைமை முட்டுக் கொடுத்தாலும், அக்கட்சியின் சில கறுப்பு ஆடுகள் காரியத்தை கெடுத்து விடுகின்றன.

உதாரணமாக, தி.மு.க., செய்தித் தொடர்பாளர், பிரிவு இணைச் செயலரான தமிழன் பிரசன்னாவின் அண்மை செயல் கட்சியின் உண்மை முகத்தை போட்டுக் காட்டியதுடன், இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர், வாமன அவதாரத்தில் வந்த குள்ள அந்தணனை, பூணுாலுடன் மகாபலி துாக்கி நிற்பது போல, அட்டூழியக் கார்ட்டூனை வெளியிட்டு, வாழ்த்து கூறியிருப்பது, தி.மு.க.வினர் மீது பெரும் வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளது.

ஒருபக்கம் ஸ்டாலின் வாழ்த்து மடல் வெளியிடுகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் நிர்வாகி, கேலியும் கிண்டலுமாக அந்தக் கடவுளை சித்தரித்து நையாண்டிபாடுகிறார். திமுகவின் இந்த செயல் குழந்தையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்ற செயலாகத்தான் இருப்பதாக நடுநிலைவாதிகள் கூறி வருகின்றனர்.

எனவே, திமுகவின் உண்மை முகம் என்ன என்பதை பொதுமக்களிடம் காண்பித்தால் மட்டுமே, இருக்கிற கொஞ்ச நஞ்சம் இந்துக்களின் ஓட்டாவது தி.மு.க.விற்கு விழும். மாறாக, இந்து விரோதிகளா..? இந்து ஆதரவாளர்களா..? என்பதில் தி.மு.க.வின் தலைமையே தெளிவில்லாமல் மதில் மேல் பூனையாக இருந்தால், நாளைக்கு நமக்கும் இதே கதிதான் எனக் கூறி கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டும் இல்லாமல் போய்விடும்.

இன்னும் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., ஹிந்து விரோதியா, ஆதாரவாளர்களா; பிராமண எதிர்ப்பாளர்களா என்ற நிலைப்பாட்டை, உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், எனக் கேட்டுள்ளார்.

Views: - 0

0

0