CPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…!!

5 March 2021, 8:52 pm
stalin-balakrishnan-muththarasan - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை திமுக பேசியே வழிக்கு கொண்டு வந்து விடுகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்து விட்ட திமுக, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதியை ஒதுக்கீடு செய்தது.

முதலில் முரண்பிடித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை, திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் மற்றும் ஸ்டாலின் அழைத்து பேசி, அவர்களை தங்களின் வழிக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில் மற்றொரு பிரிவான மார்க்சிஸ்ட் திமுகவின் முடிவை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதியை வழங்க வேண்டும் என்று விடாபிடியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்குள் இழுத்து விட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியை எளிதில் இழுத்து விடலாம் என்பது திமுகவின் எண்ணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 20

0

0